பிறந்த நாள், திருமண நாள் எனக் குடும்ப கொண்டாட்டங்களின் போது விருந்தினரை உபசரிப்பது வழக்கம். ‘‘விருந்தளிக்கும் போது, உங்களின் நண்பர், சகோதரர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்திலுள்ள பணக்காரர்களை அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் பதிலுக்கு அவர்களும் எப்போதாவது விருந்தளிக்கலாம். அதுவே உங்களுக்கான கைமாறாகி விடும். ஏழைகள், உடல் குறை உள்ளவர்களுக்கு விருந்தளியுங்கள். அவர்கள் சந்தோஷமுடன் ஏற்பர். கைமாறு செய்ய அவர்களிடம் ஏதும் இருக்காது. ஆனால் உயிர்த்தெழுதலின் போது உங்களுக்கான கைமாறு பல மடங்கு கிடைக்கும்”