விழுப்புரம்; கோலியனுாரில் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2வது வார சனிக்கிழமையையொட்டி, உப்பிலியப்பன் சுவாமி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழுப்புரம் அருகே கோலியனுாரில் பூமிநாயகி, நிலா நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் பெருமாளுக்கு, புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.தொடர்ந்து 6:00 மணிக்கு பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.வரும் 3ம் தேதி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 4:00 மணிக்கு தளியல் திருப்பாவாடை பூஜை நடக்கிறது.