அனுப்பர்பாளையம்: திருப்பூர், பூலுவபட்டி ஏ கிராண்ட் மஹாலில் ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, ஸமேத ஸ்ரீ சீனிவாஸ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவ நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைப்பெற்று வருகிறது. ஆறாம் ஆண்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருக்கல்யாணம் மந்திரங்கள் முழங்க காலை 7:30 மணி முதல் மதியம் 12:30 மணிக்குள் உத்தரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் நடைபெற்றது. பொது மக்கள் கலந்து கொண்டு திருகல்யானத்தை கண்டு கழித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை க.ஜி.எஸ். குடும்பத்தினர் செய்திருந்தனர்.