வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பவுர்ணமி பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்காக நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதி பக்தர்கள் தாணிப்பாறைக்கு வந்தனர். காலை 6:00 மணி முதல் பரிசோதனைக்கு பின் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் நடந்த வழிபாட்டில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளை தரிசித்தனர்.மேக மூட்டத்தால் மதியம் 2:00 மணிக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.மலையில் தங்கிய பக்தர்களுக்கும் கிழிறங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. குறைந்தளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் பக்தர்கள் ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.