நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி தினமான நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரியஒளி விழுந்தது. மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் காந்திக்கு நினைவு மண்டபம் எழுப்பி, 1956ல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்தநாளில் சூரிய கதிர்கள் காந்தியின் அஸ்தி வைத்த இடத்தில் விழுவது சிறப்பாகும். நேற்று மதியம், 12:00 மணிக்கு காந்தி மண்டபத்தில் சூரியஒளி விழுந்த போது ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது. முன்னதாக பெண்கள் ராட்டையில் நுால் நுாற்றனர். தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, எஸ்.பி, பத்ரிநாராயணன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டம் இல்லை.