பதிவு செய்த நாள்
19
அக்
2020
02:10
விழுப்புரம் : பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மர் கோவிலில், சுவாதி சுதர்சன நரசிம்ம ஹோமம் நடந்தது.விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மர் பெருமாள் கோவிலில், கடந்த 17ம் தேதி முதல் நவராத்திரி ேஹாமம் ஒரு லட்சம் ஆவர்த்தி நடைபெற்று வருகின்றது. இந்த ேஹாமம் வரும் 25ம் தேதி மாலை மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைகின்றது.
நவராத்திரி ேஹாமத்துடன் நேற்று, 231வது சுவாதி சுதர்சன நரசிம்ம ஹோமம் நடந்தது.சுவாதியை முன்னிட்டு, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மூலவருக்கு அபிேஷகமும், காலை 7:30 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின், காலை 8:30 மணிக்கு சுவாதி ஹோமம் ஆரம்பம், வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் யாகசாலைக்கு புறப்பாடு மற்றும் காலை 9:00 மணிக்கு சுதர்சன நரசிம்ம ஹோமம் ஆரம்பம், சுதர்சன பெருமாள், நரசிம்ம பெருமாள் மந்திரங்கள் ஓதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு வசுத்தாரா ஹோமம், பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகங்களுக்கு கலச தீர்த்தம் சேர்க்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், கோவில் முதன்மை அர்ச்சகர் பார்த்தசாரதி செய்திருந்தனர்.