சோமனூர்: நவராத்திரி பண்டிகையை ஒட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நவராத்திரி கொலு பூஜை கடந்த, 17 ம்தேதி துவங்கியது. சூலூர் சுற்றுவட்டார அம்மன் கோவில் களில் தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. விஜய தசமியான நேற்று காலை, சோமனூர் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல் நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங் களால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, அலங்கார பூஜைக்குப்பின், மகா தீபாராதனை நடந்தது. ஆண்டு தோறும் விஜய தசமியன்று சூலூர் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடக்கும். ஊரடங்கால் இம்முறை தேர் திருவிழா நடக்கவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.