Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் நவராத்திரி சிறப்பு ... நல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு! நல்லனவற்றுக்கு சனாதன தர்மமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நில அபகரிப்பை தடுக்க பதிவுத்துறை திடீர் கிடுக்கிப்பிடி
எழுத்தின் அளவு:
கோவில் நில அபகரிப்பை தடுக்க பதிவுத்துறை திடீர் கிடுக்கிப்பிடி

பதிவு செய்த நாள்

26 அக்
2020
06:10

 சென்னை: கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க, சர்வே எண்கள் அடிப்படையில், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை, பதிவுத்துறை துவக்கியுள்ளது.

தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தனி நபர்களால் அபகரிக்கப்படுகின்றன. போலி ஆவணங்கள் தயாரித்து, வேறு பெயருக்கு பத்திரங்கள் பதிந்து, மோசடி நடக்கிறது. அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதில், அறநிலைய துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு, பிற துறைகளின் ஒத்துழைப்பு, குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அறநிலைய துறையின் நில மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க, பதிவுத்துறை முன்வந்துள்ளது. இதற்காக, பத்திரப்பதிவில் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், திம்மையன்பேட்டை, காசி விஸ்வநாதன் மற்றும் வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 50 ஏக்கர் நிலம், சமீபத்தில் மீட்கப்பட்டது. தனியார் பெயரில் இருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த நிலம் தொடர்பான விற்பனையில் ஏமாற வேண்டாம் என, அறநிலைய துறைஅறிவித்தது. இதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில், இதில் சம்பந்தப்பட்ட, சர்வே எண்களில், போலி ஆவணங்கள் ரத்து விபரத்தை, வில்லங்க சான்றில் சேர்க்க, மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, இதில் தொடர்புடைய நிலங்கள் விற்பனை பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பிற மாவட்டங்களிலும் பதிவுத்துறை ஒத்துழைத்தால், கோவில் நில மீட்பு பணிகள் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar