பதிவு செய்த நாள்
27
அக்
2020
04:10
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு திருப்பணி தொடங்க மகாசாந்தி ேஹாமம் நடந்தது. விக்கிரவாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் குட முழுக்கு நடந்து சுமார் 60ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபடியால் குடமுழுக்கு பணி தொடங்கும் போது பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டது. தற்பொழுது அமைச்சர் சண்முகம்பரிந்துரையின் பேரில் இந்து அறநிலையதுறை குட முழுக்கு திருப்பணிகளை துவங்க ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து கிராம திருப்பணி குழுஅமைத்து கோவில் பணிகள் துவங்க நேற்று மாலை 4:00 மணிக்கு திருவதிகை ஸ்ரீதரன் பட்டாச்சாரியார் தலைமையில் விகநஸன் பட்டாச்சாரியார் குழுவினர் மகா சாந்தி ேஹாமத்தை துவக்கினர்.
திருப்பணிக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளரும் ,மாவட்ட அறக்காவலர் குழு உறுப்பினர் பூர்ணராவ் , பொருளாளர்கள் செல்வகுமார், சீனிவாசன், குழு உறுப்பினர்கள் பாபு, சந்தானம் ,குமாரசாமி, சுப்புராயலு, ரவி, வாசு,மணிவண்ணன், பலராமன், ராஜா, கண்ணன் , சக்தி, அருண்குமார் , பாலசுப்பிரமணியன், பிரபாகரன் ,பெருமாள், சங்கர், கிராம முக்கியஸ்தர்கள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .