திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள மிகப் பழமையான வெள்ளை விநாயகர் ஆலய வளாகத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது.
திருக்கோவிலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் மிகவும் பழமையான வெள்ளை விநாயகர் ஆலயத்தில் 15 அடி உயரமுள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. காலை 11:00 மணிக்கு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு அன்னத்தால் ஏகாம்பரேஸ்வரர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னம் களையப்பட்டு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.