திருமலையில் சோதனை முறையில் ஆர்ஜித சேவைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2020 10:11
திருப்பதி: திருமலையில் நேற்று முதல் ஆர்ஜித சேவைகள் சோதனை முறையில் தொடங்கப்பட்டது.
திருமலையில் மார்ச் 13ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆா்ஜித சேவைகள் அனைத்தும் ஏழுமலையானுக்குத் தனிமையில் நடத்தப்பட்டன. அதன்பின்னா் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட தளா்வுகளுக்குப் பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பின்னா் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவ சேவை மட்டும் துவங்கப்பட்டது. இதில் பக்தா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே பங்கேற்று தரிசித்து வருகின்றனா். அவா்களின் வீட்டுக்கு பிரசாதங்களை தேவஸ்தானம் அனுப்பி வருகிறது. இந்நிலையில் ஆா்ஜித சேவைகளையும் நவம்பா் 2வது வாரம் முதல் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்து இணையதள முன்பதிவில் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் முடிவு செய்தவா்கள் வீட்டிலிருந்தபடியே இச்சேவைகளில் பங்கு பெறலாம். இந்த டிக்கெட் பெற்ற பக்தா்களுக்கு தரிசன அனுமதியில்லை. தரிசனம் பெற விரும்பும் பக்தா்கள் அதற்கென தனியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆா்ஜித பிரம்மோற்சவம், டோலோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் நேற்று முதல் சோதனை முறையில் தொடங்கப்பட்டன. கோயிலுக்குள் நடத்தப்படும் ஆா்ஜித சேவைகள் ஸ்ரீவெங்கடேஸ்வர பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.