Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: மிதுனம் கார்த்திகை பலன்: சிம்மம் கார்த்திகை பலன்: சிம்மம்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கார்த்திகை பலன்: கடகம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: கடகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


புனர்பூசம் 4ம் பாதம்
    உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் செய்வார். ஜீவனாதிபதி செவ்வாய் டிச. 9 வரை சாதகமற்ற சூழலில் சஞ்சரித்தாலும் மற்ற கிரகங்களின் துணை திறம்படச் செயலாற்ற வைக்கும். எதைச் செய்தாலும் முழு மனதுடன் செய்து முடிப்பீர்கள்.  சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தனாதிபதியின் வலிமை சிறப்பான பணவரவைத் தரும். உறவினர் வருகையால் வீட்டில் கலகலப்பு நிலவும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்ல வாய்ப்புண்டு. சூடான உணவுகளை ருசிப்பதில் ஆர்வம் கூடும். அண்டை அயலாரோடு கருத்து வேறுபாடு உண்டாகலாம். குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைக்கும் முயற்சியில் தடை ஏற்படும். வாகனப்பயணம் சுகமாக அமையும் என்றாலும் செலவு கூடும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். மூட்டுவலி, கை கால் குடைச்சல், முதுகு வலி பிரச்னைகளால் சிரமம் உண்டாகக் கூடும். வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை. வேலைக்குச் செல்வோர் பேச்சுத்திறமையின் மூலம் தங்கள் பணிகளை எளிதாக்கிக் கொள்வர். சுயதொழில் செய்வோரில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் பாடங்களைப் எளிதாக புரிந்து கொள்வர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மாதம் இது.
பரிகாரம் : சரஸ்வதி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ. 22

பூசம் :
 வெற்றி தரும் வகையில் கிரகநிலைகள் உள்ளன. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும். இழுபறியில் இருந்த செயல்கள் விரைவாக நடைபெறும். மனதில் மகிழ்ச்சி நிலவும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குடும்ப விவகாரத்தில் உங்களின் கருத்து முக்கியத்துவம் பெறும். கறாராகப் பேசி பிறரை சிந்திக்க வைப்பீர்கள். பணவரவு சிறப்பாக உள்ளதால் சேமிப்பில் ஈடுபடலாம். எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது உடல்நலனிற்கு நல்லது. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை குறைக்க துணை நிற்கும். உட்கார்ந்த இடத்திலேயே பல விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். உறவினரால் உண்டாகும் கலகங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள். பிள்ளைகளின் மனக்கலக்கத்தினைப் போக்க ஆலோசனை கூறுவது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை தக்க தருணத்தில் பயன் தரும். அவ்வப்போது உண்டாகும் உடல் அசதியால் செயல்வேகம் குறையும்.  தியானம், யோகா பயிற்சி உடல்நிலையை சீராக வைக்க உதவும். பணியாளர்கள் அலுவலகத்தில் தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவர். சுயதொழில் செய்வோர் தனித்திறமையின் மூலம் தங்கள் பெயரை நிலைநாட்டுவர். மாணவர்கள் எழுதும் திறனை உயர்த்துவது அவசியம். முன்னேற்றம் தரும் மாதம் இது.
பரிகாரம் :  ஹயக்ரீவர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ. 22, 23

ஆயில்யம்:
    எப்பொழுதும் வேகமாகச் செயல்பட்டு வரும் நீங்கள், இந்த மாதத்தில் குருவின் பார்வை பலத்துடன்  நிதானத்தை கடைபிடிப்பீர்கள். இயற்கை குணமாக வேகத்தோடு நட்சத்திர அதிபதி புதன் தரும் விவேகத்தையும் கலந்து செயலில் வெற்றி காண்பீர்கள். சற்று அலைச்சலைக் கண்டாலும் அயராத முயற்சி வெற்றியை சாத்தியமாக்கும். சேமிப்பு உயரும். சிக்கன நடவடிக்கையில் ஈடுபாடு கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். நான்கு பேர் மத்தியில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்பதை உணருங்கள். முன்பின் அறிமுகமில்லாத நபரிடம் கவனத்தோடு இருக்கவும். உறவினர் ஒருவர் உங்கள் உதவியை நாடி வருவார். உதவி கேட்டு வருவோரின் தகுதியறிந்து நிதானமாக செயல்படுவது நல்லது. வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை புதிதாக மாற்றிக் கொள்ள நேரம் கூடி வரும். ஆடம்பரமான பர்னிச்சர் சாமான்கள் சேரும் வாய்ப்புண்டு. பிரயாணத்தால் சுகம் காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்களில் உற்கசாத்தை உணர்வீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணியாளர்கள் அலுவலகத்தில் விருப்பத்துடன் கூடுதல் பணிச்சுமையை ஏற்றுக்கொள்வர். சுயதொழில் செய்வோர் விருப்பத்திற்கேற்ப தொழில்ஙமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர கால நேரம் சாதகமாக அமையும். மாணவர்கள் பொதுஅறிவுத் திறனை உயர்த்திக் கொள்வர். விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் மாதம் இது.    
பரிகாரம் : சத்ய நாராயண விரதம் நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ. 23

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar