Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: மகரம் கார்த்திகை பலன்: மீனம் கார்த்திகை பலன்: மீனம்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கார்த்திகை பலன்: கும்பம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: கும்பம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


அவிட்டம் 3, 4ம் பாதம்: இந்த மாதத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதால் சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த தடைகள் விலகியிருப்பதாக உணர்வீர்கள். நினைத்த செயல்கள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பேச்சில் அதிகார தோரணை வெளிப்படுவது நல்லதல்ல. அதிகாரம் நிறைந்த பேச்சால் குடும்ப உறுப்பினர்களுடன் வீண் கருத்து வேறுபாடு தோன்றலாம். இந்த மாதத்தில் பொருள் வரவு சிறப்பாக உள்ளதால் சேமிப்பு உயர்வடையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை புதிதாக வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவிற்கு வரும். குடியிருக்கும் வீட்டில் மராமத்து பணிகள் செய்ய கால நேரம் கூடி வரும். வீட்டில் புதிய பர்னிச்சர் சாமான்கள் சேரும். குடும்பத்தினரோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களை வேகமாக இயங்கச் செய்யும். ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் விலை அதிகமான பொருட்களை வாங்க தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் கவுரவம் உயரக் காண்பர். சுயதொழில் செய்வோர் தங்கள் பணிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பர். மாணவர்கள் எழுத்து வேகத்தினால் வகுப்பில் முன்னிலை பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.
பரிகாரம் : சுவாமி ஐயப்பனின் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 8

சதயம் : ஜீவன ஸ்தானத்தின் வலிமையால் ஈடுபட்ட செயல் முடியும் வரை ஓய மாட்டீர்கள். எந்த ஒரு செயலும் நீங்கள் நினைத்த மாதிரி நடக்கிறதா என்பதை கண்காணிப்பீர்கள். ராசிநாதன் சனி, நட்சத்திர அதிபதி ராகுவின் பலம் நன்றாக உள்ளதால் அதிரடியாக செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். டிச.26ல் அன்ற நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக பல காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இருக்கும் இடத்தில் இருந்தே காரியத்தை சாதிக்கும் திறன் உயரும். குடும்பத்தில் நிலவும் சலசலப்பை போக்க முயற்சிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். எனினும் ஆடம்பர செலவு உயர்வதால் சேமிப்பில் தேக்கம் உண்டாகும். பேச்சில்  நகைச்சுவை அதிகம் வெளிப்படும். கிண்டலாக  பேசும் வார்த்தைகள் எதிரில் உள்ளவர்களின் மனதை புண்படுத்தலாம்.  அண்டை அயலாரோடு இன்முகத்துடன் பழகுவது உங்களுக்கு கூடுதல் நன்மையைத் தரும். உடன் பிறந்தாரோடு கருத்து வேறுபாடு உண்டாகலாம். அலைபேசி, இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு கருவிகளில் பழுது உண்டாகி சிரமம் காண்பீர்கள். வாகனங்களை இயக்கும்போது வேகக்கட்டுப்பாடு அவசியம் தேவை. பிள்ளைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவான பேச்சு உற்சாகத்தோடு செயல்பட வைக்கும். பணியாளர்கள் அலுவலகத்தில் சவாலான சூழலை எதிர்கொள்வர். சுயதொழில் செய்வோருக்கு வித்தியாசமான புதிய முயற்சி வெற்றி பெற்றுத் தரும். மாணவர்கள் பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்ப்பது அவசியம். தொழிலில் வளர்ச்சி தரும் மாதம் இது.
பரிகாரம் : பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வரவும்.
சந்திராஷ்டமம் : டிச. 9

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: உங்கள் உழைப்பிற்கான பலனை இந்த மாதம் அடைய உள்ளீர்கள். ராசிநாதன் சனி பகவானின் வலிமையான சஞ்சாரத்தால் வாழ்க்கைத் தரம் உயரும். நட்சத்திர அதிபதி குரு 12ல் நீசம் பெறுவதால் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் மன உறுதியோடு முயற்சித்து நினைத்ததை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறத் துவங்கும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். குடும்பத்தினர்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் நிர்வாகத் திறன் வெளிப்படும். உங்களை ஏளனமாக எண்ணியவர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் அதிகரிக்கும். வாய்க்கு ருசியாக சாப்பிடுவதில் ஆர்வம் கொள்வீர்கள்.  அண்டை வீட்டாருக்கு நேரும் சோதனை கண்டு வருந்துவீர்கள். உடன்பிறந்தாரோடு கருத்து வேறுபாடு வரலாம். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. முடிந்த வரை வீண் பிரயாணங்களைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. உறவினர் வழியில் விரும்பத்தகாத பிரச்னையை சந்திக்கலாம். பெற்றோருக்கு பணிவிடை செய்வதில் மகிழ்ச்சியடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் காணாமல் போகும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உண்டாகும். தம்பதியராக இணைந்து செய்யும் பணிகள் வெற்றியைக் காணும். பணியாளர்கள் பதவி உயர்விற்கான போட்டியில் முன்னிலை பெறுவர். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் லாபத்தை அடைவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். லாபம் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 10

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar