பதிவு செய்த நாள்
19
நவ
2020
05:11
நங்கவள்ளி: சென்றாய பெருமாள் கோவில் கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி, பெரியசோரகை, சென்றாய பெருமாள் கோவிலில், இன்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் பழனிசாமி தலைமையில் கும்பாபி?ஷகம் நடக்கிறது. இதற்காக, சில மாதமாக, மகா மண்டபம், திருமதில், கொடிமரம், ஆஞ்சநேயர் சன்னதி, மடப்பள்ளி, தரைத்தளம் ஆகிய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 6ல், முகூர்த்தக்கால் நடப்பட்டு, 17ல், முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதில், சுதர்சனம் பட்டாச்சாரியார் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர், யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். நேற்று, குள்ளானூர் காளியம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து, மேள, தாளம் முழங்க, ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தனர். இரவு, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, மகா கும்பாபி?ஷகம் நடக்கிறது. பக்தர்கள் வசதியாக வந்து செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வாகன நிறுத்தம், பிரசாதம் வழங்குமிடம், நடமாடும் கழிப்பறை, குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரியசோரகை கிராமம் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.