காரைக்குடி : குன்றக்குடியில், ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்ஹார விழா கொரோனா நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெறும். கந்தசஷ்டி விழா தொடங்கிய நாள் முதல் தினமும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொள்வர். நவ.15ல் கந்தசஷ்டி விழாதுவங்கி, 20ல் சூரசம்ஹாரம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக இன்று நடப்பதாக இருந்த சூரசம்ஹார விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டுமே பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுவர். வழக்கமான அலங்காரம், பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.