கருமத்தம்பட்டி முருகன் கோவில்களில் சஷ்டி திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2020 03:11
கருமத்தம்பட்டி: கந்த சஷ்டி விழாவை ஒட்டி, முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த, 15 ம்ததேதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்நர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். 20 ம்ததேதி சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவிலில் நேற்று முன் தினம் காலை கந்த சஷ்டியை ஒட்டி திருக்கல்யாண உற்சவம் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. ஊரட்ங்கால் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.