நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் 20 ம் தேதி கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு 18ம் தேதி தாரகாசூரன் வதம், 19ம் தேதி இரவு காமாட்சியம்மனிடம் முருகர் சக்திவேல் வாங்கி, சிங்கமுக சூரனை வதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.20ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்தது. 21ம் தேதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு கலச அபிேஷகம், இரவு 8:00 மணிக்கு முருகர், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.