பதிவு செய்த நாள்
23
நவ
2020
03:11
கொடைக்கானல், கொடைக்கானல் ஏரி சாலையிலுள்ள சாய் சுருதியில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 95வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் நாராயண சேவை, வஸ்திர தானம், ஆராத்தி, பஜன் ஆகியன நடந்தன | 5 ஆயிரம் கம்பளம், நாராயண சேவை உணவு பொட்டலங்களை 20 மலை கிராமங்களுக்கு வாகனங்கள் மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஏரி சாலையிலுள்ள குதிரைகளுக்கும் குளிரை தாங்கும் பிரத்யேக வஸ்திரம், தீவனங்கள், குதிரை ஓட்டிகளுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. டி.வி.எஸ்., குழும தலைவர் வேணு சீனிவாசன், மல்லிகா சீனிவாசன், அகில இந்திய சத்யா சாய் சேவா நிறுவனங்களின் துணைத்தலைவர் ரமணி, தமிழ்நாடு மாநில துணை தலைவர் சுரேஷ், மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் விஜயகிருஷ்ணன், கொடைக்கானல் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊரடங்கால் இங்கு வருகை தரும் ஏழை எளியோருக்கு வஸ்திரம் மற்றும் நாராயண சேவை வழங்கப்படும் நிலையில் இதை தவிர்க்கும் விதமாக கிராமங்கள்தோறும் சப்ளை செய்தனர். நக்சல் ஒழிப்பு படை போலீசாரும் இதில் கலந்துகொண்டு இச்சேவையை சிறப்புற செய்தனர்.