பதிவு செய்த நாள்
30
நவ
2020
12:11
விருதுநகர் : மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபம் ஏற்றி வழிபட்டனர்.
விருதுநகர்: வாலசுப்பிர மணிய சுவாமி, வெயிலுகந்தன், பராசக்தி மாரியம்மன், மீனாட்சி சொக்கநாதர், ரயில்வே பீடர் ரோடு ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.ராஜபாளையம்: சஞ்சீவி மலை சுப்பிரமணியர் சுவாமி, கிருஷ்ணன், சொக்கர், அண்ணாமலையார் அம்பல புளி பஜார் சுப்பிரமணியர், தளவாய்புரம் புத்துார் மலை, பழைய முத்தாலம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
சிவகாசி: துர்க்கை பரமேஸ்வரி அம்மன், பேச்சியம்மன், விஸ்வநாதர், சிவசுப்பிரமணிய சுவாமி, உமா பரமேஸ்வரி, திருத்தங்கல் நின்ற நாராயண சுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சொக்கப்பனை கொளுத்தினர்.சாத்துார்: இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவிஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சியம்மன் கோவிலில் கார்த்திகை தீபம், முருகன் வள்ளி, தெய்வானை சுவாமிக்கு அபிஷேகம், சொக்கப்பனை கொளுத்தினர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சி.பி.ஜெயச்சந்திரன் செய்தார். ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை 6:30 மணிக்கு சுவாமி கோவில் வளாகத்திற்குள் ஊர்வலம் வந்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சொக்கலிங்கம் பிள்ளை, விழாக்குழு செய்தது.
அருப்புக்கோட்டை: மீனாட்சி சொக்கநாதர், ஆயிரங்கண் மாரியம்மன், பத்ரகாளியம்மன், முத்துமாரியம்மன், வாலசுப்பிரமணியர் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீப வழிபாடு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார் வளாகம் வைத்தியநாதர் சுவாமி கோயிலில் வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களை ரகு பட்டர் செய்தார்.