பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மாலை, 4:30 மணிக்கு அபிேஷகம், 5:30 மணிக்கு அலங்கார தீபாராதனை, தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அழகு நாச்சியம்மன் கோவிலில், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி மாலை, 6:00 மணிக்கு அபிேஷகம், இரவு 7:30 மணிக்கு அலங்காரம், தீபாராதனை மற்றும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசுவாமி கோவிலில், தீபத்திருநாளையொட்டி, அய்யாசுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. கோவில் முன்பக்கம் கார்த்திகை தீபம் ஏற்றி பூஜை செய்யப்பட்டது.இதேபோல், கொண்டம்பட்டி மல்லேஸ்வரர் மலைக்குன்று கோவிலில், மல்லேஸ்வரர், மல்லேஸ்வரிக்கு சிறப்பு பூஜையில், பால், பன்னீர், இளநீர், எலும்பிச்சை, தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிேஷகம் செய்தனர்.மல்லேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில் முன்பக்கம் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.