குளித்தலை: குளித்தலை நகராட்சி பாரதி நகர் பகவதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 11ல் தொடங்கியது. அன்று காலை, கடம்பர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து, பால்குடம், தீர்த்தக்குடங்களை முக்கிய வீதிகள் வழியாக மக்கள் எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர். இரவு காளியம்மன், மாரியம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, கோவில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். குழந்தைகளை தொட்டிலில் சுமந்தும், அக்னி சட்டி ஏந்தியும், உடலில் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். 3வது நாள், கிடா வெட்டுதல் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிவுற்றது.