குளித்தலை: மேட்டுமருதூர் காளியம்மன் கோவில் குளிர்ச்சி திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூரில் நேற்று முன்தினம் இரவு குளிர்ச்சி திருவிழா நடந்தது. விழாவில், பெண்கள் மாவிளக்கு தட்டு எடுத்து வந்து, மல்லாண்டவர் தேவேந்திரன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தடைந்தனர். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அனைவருக்கும் அன்னதானம், நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது.