திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக பகல் பத்து உற்சவம் துவங்கியது.நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் 10 நாட்கள் கொண்டாடப்படும் பகல் பத்து உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.காலை 10:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், பிற்பகல் 2:00 மணிக்கு ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழியும், மாலை 4:00 மணிக்கு தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் வலம் வந்தார்.வரும் 24ம் தேதி இரவு பெருமாள் மோகன அவதாரத்தில் சாத்துப்படியும், திருமங்கை ஆழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்க வாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.இதேபோன்று, கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.