பதிவு செய்த நாள்
18
டிச
2020
12:12
வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. மேற்கண்ட நூல்கள் இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன. மார்கழி நோன்பு நோற்கும் முறைகள்; மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. இவர்கள் விடியலுக்கு முன்பு எழுகின்றனர். தூங்குகின்றவரைப் பலவாறு எழுப்புகின்றனர். அனைவரும் ஓரிடத்தில் கூடுகின்றனர். ஆற்றில் மார்கழி நீராடுகின்றனர். கரையில் பாவைக்களம் ஒன்றை அமைக்கின்றனர். அங்கே ஒரு பாவையை உருவாக்குகின்றனர். அதைப் பூக்களால் அலங்கரிக்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடுகின்றனர். வேண்டுகின்றனர். வணங்குகின்றனர்.
வேண்டுகின்ற பலன்கள்: கன்னியர்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும், கணவன், வைணவக் கன்னிக்கு வைணவ அடியனாகவும், சைவக் கன்னிக்கு சிவனடியனாகவும் விளங்க வேண்டும். இனிப்பிறவிகள் இருந்தால், அந்த ஏழேழ் பிறவியிலும் இறைவனுக்கே அடிமைத் தொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு தமக்கு வேண்டியவற்றை சிறப்பாக வேண்டிய கன்னியர்கள், முடிவில் அனைவருக்கும் பொதுவாக, ஊர் செழிக்க, நாடு செழிக்க, தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழிய வேண்டும் என்று வேண்டுகின்றனர்.
பக்திப் பாடல்கள்: மார்கழியில், தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.