பதிவு செய்த நாள்
18
டிச
2020
11:12
திருப்பதி: திருமலையில், நேற்று முதல், சுப்ரபாதத்திற்கு பதிலாக, ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் துவங்கியது.
திருமலையில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுதும், காலையில் வழக்கமாக பாராயணம் செய்யப்படும் சுப்ரபாதத்திற்கு பதிலாக, ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதன்படி, நேற்று அதிகாலை முதல், திருமலையில் திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் துவங்கியது. சூரிய உதயத்திற்கு பின் உள்ள திதி, நட்சத்திரம், மாத பிறப்பு உள்ளிட்டவற்றை மட்டுமே வைணவ சம்பிரதாயப்படி, தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால், நேற்று முதல் திருமலையில் திருப்பாவை பாராயணம் துவங்கப்பட்டது. ஜன., 14ம் தேதி காலை வரை, திருமலையில் திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட உள்ளன.