மனம் ஒன்றை விரும்பும் போது, அது தவறாக இருந்தால் புத்தி தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் துன்பப்பட நேரிடும். இதிலிருந்து விடுபட்டு மனதை ஒருமுகப்படுத்தச் செய்யும் பயிற்சியே தியானம். இப்பயிற்சியில் கடவுளின் திருவுருவத்தை இடைவிடாமல் சிந்திப்பதால் மனம் வலிமை பெறும். புத்தியின் வழியில் செயல்படத் தொடங்கும்.