காரைக்கால்; காரைக்கால் தாயிராப் பள்ளி வாசலில் கந்துாரி விழாவையொட்டி ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியேற்றம் நடந்தது.காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ள தாயிராப்பள்ளிவாசல் ஹாலத் சுல்தானுல் ஆரிப்பீன் செய்யிது அஹ்மது கபீர் ரீபாயின் வருடாந்திர கந்துாரி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு புனித ரவுலா ஷரீப்பிற்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி ஊர்வலம் நடந்தது. இரவு குதிரை கொடியேற்றம் நடந்தது. வரும் 10ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தாயிராப் பள்ளி வாசலில் மின்அலங்காரம் செய்யப்பட்டது.