சாத்துார்: இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் நேற்று 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடபட்டது. இருக்கன் குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கருணாகரன், விருதுநகர் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், நகை சரிபார்ப்பு அலுவலர் சிவலிங்கம், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. சாத்துார், துலுக்கப்பட்டி ஓம்சக்தி வார வழிபாட்டுமன்றத்தினர், அய்யப்பா சேவா சங்கம் உறுப்பினர்கள் , கோவில் அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். இதில் தங்கம் 131.500 மி.லி. கிராம். வெள்ளி, 496.600 மி.லி. கிராம் , ரொக்கம் ரூ 33, 22,211 ஐ காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.