பதிவு செய்த நாள்
08
ஜன
2021
03:01
கோவை : குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நடந்தது. கோவை - பொள்ளாச்சி ரோடு, குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த, குண்டத்து மாகாளியம்மன் கோவில். இக்கோவிலில், கடந்த, 44 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின், கோவில் திருப்பணிகளும், கும்பாபிஷேகம் நடக்கவில்லை.இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றனர்.கோவில் பொறுப்பாளர் வடிவேல் கூறுகையில், கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்துக்காக, நிதியுதவி கேட்டு எம்.எல்.ஏ., சண்முகத்தை அணுகினோம். அவர், அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார், என்றார்.