புதுச்சேரி; வைத்திக்குப்பம் ராதா ருக்மணி சமேத பக்தவத்சல குண பாண்டுரங்கன் கோவிலில், வேங்கடாசலபதி பஜனைக் கூடம் சார்பில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதையொட்டி, காலை 5:00 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் பெருந்தேவி தாயார் சன்னதியில் இருந்து உஞ்சவ்ருத்தி பஜனை புறப் படுகிறது. இதில் உஞ்சவ்ருத்தியில் சேர்க்கும் பச்சை அரிசி, பருப்பு வகைகள், வெல்லம், தனம் போன்றவை நித்தியபடி பிரசாரத்திற்கு சேர்த்து உபயோகப்படுத்தப்படும். இதில் பங்கேற்று ராதா ருக்மணி சமேத பக்தவச்சல குண பாண்டுரங்கன் சுவாமி அருளை பெறலாம்.