பதிவு செய்த நாள்
11
ஜன
2021
12:01
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா, கந்துாரி விழாவை முன்னிட்டு, 2ம் தேதி அதிகாலை தர்காவின் அனைத்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 464 வது ஆண்டு கந்துாரி விழா, வரும், 14ல் கொடியேற்றத்துடன் துவங்கி, முக்கிய நிகழ்வாக, 23ம் இரவு, நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 24 அதிகாலை நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, காலை, 6:30 மணிக்கு, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், தர்காவின், ஐந்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.