குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில், திருமுறைக்கழக, 80ம் ஆண்டு முத்து விழாவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. குமாரபாளையம் அடுத்த, சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழகம் சார்பில் திருமுறைக்கழக, 80ம் ஆண்டு முத்து விழா, ஜன., 6ல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று, 4ம் நாள் நிகழ்ச்சியாக, திருச்சி காஷ்யப் மகேஷ் மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று, சென்னை ரமணன் பங்கேற்று, மூவர் முத்தமிழ் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றவுள்ளார்.