பதிவு செய்த நாள்
17
ஜன
2021
10:01
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால் குடம் எடுத்தனர்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பால் குட விழா, கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் மூலம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 30ம் ஆண்டு பால்குட விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சரவண பொய்கையை ஒட்டிய காவடி மண்டபத்திலிருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால் குடங்களை ஏந்தி, மாடவீதி வந்தனர்.பால் குடங்களுடன் அலகு குத்தி, காவடி அணிவகுப்பும் நடந்தது. பின், பகல், 10:30 மணியளவில், கந்தசுவாமி உற்சவருக்கு, பாலாபிஷேகம் நடந்தது.