கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் கோதண்டராமர் சுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் நுாற்றாண்டை கடந்து பெருமை பெற்ற சீதாலட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை விக்னேஷ்வரபூஜை, புண்ணியாவஜனம், கலச ஆவாகணம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.உற்சவ சிலைகளுக்கு இளநீர், தேன், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிேஷகம் செய்த பின், கலசாபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரங்களுக்கு பின் விஷ்ணு சகஸ்ர நாமம் வாசித்தனர். வீதியுலா உற்சவத்தில் ராம பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடியும், பெண்கள் கோலாட்டம் ஆடிச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.