திருப்பூர்; பிரசித்தி பெற்ற, சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.வீரகாளியம்மன் கோவில் தேர் திருவீதியுலா நேற்று நடந்தது. தேர் பாதை, மலையடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில், வீரகாளியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இன்று விநாயகர் வழிபாடு கொடியேற்று விழாவும் நடக்கிறது. 28ம் தேதி சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது.