உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே களரியில் ஹிந்து சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த டிச.4 அன்று கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.45ம் நாள் மண்டலபூஜையை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.நிர்வாகஸ்தர்கள் ராமு, விஜயராமு, பா.ஜ., மாவட்டத் தலைவர் முரளிதரன், சட்டசபை பொறுப்பாளர் ஜி.குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.