பதிவு செய்த நாள்
22
ஜன
2021
06:01
கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், கும்பாபி ?ஷகம் நடத்தும் வகையில், பல மாதங்களாக புனரமைப்பு பணி நடந்து, நிறைவு பெற்றுள்ளது. இன்று காலை, 4:00 மணிக்கு சுதர்சன ?ஹாமத்துடன் கும்பாபி ?ஷக விழா துவங்குகிறது. நாளை காலை, 7:40 மணிக்கு கோ பூஜை, வாஸ்து ?ஹாமம் நடக்கிறது. நாளை மறுநாள் காலை, 8:30 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், முதல் கால பூஜை துவங்குகிறது. வரும், 24ல் நான்காம் கால பூஜை மற்றும் கடம் புறப்பாடு நடக்கிறது. 25 காலை, 10:00 மணிக்கு கும்பாபி ?ஷகம், இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.