பழநி : பழநி முருகன் கோயிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தைப்பூச விழா நிறைவு பெற்ற நிலையிலும் வெளியூரில் இருந்தும் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாகவும், தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள், பஸ் மூலமாகவும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். காவடிகள், பால்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும் ஆட்டம் பாட்டத்துடன் வருகை தருகின்றனர். ரோப்காரில் பக்தர்கள் வருகையால் கூட்டம் அதிகம் இருந்தது. பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.