பதிவு செய்த நாள்
09
பிப்
2021
05:02
பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் மாவட்ட செயல் தலைவர் மனோசங்கர், சப் - கலெக்டர் மற்றும் மாரியம்மன் கோவில் செயல் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா இந்தாண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு அனுமதி தெரிவிக்காதது, உள்நோக்கமாக தெரிகிறது. அரசியல் கட்சிகள் பெரிய அளவில் கூட்டம் கூட்டி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி, தேர்த்திருவிழாவை ரத்து செய்யப்படுவதால், பக்தர்கள் வேதனையடைகின்றனர்.எனவே, கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் மாரியம்மன் கோவில் திருவிழாவை, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த, ஆவணம் செய்ய வேண்டும். தேர்த்திருவிழா ரத்து என அறிவிக்கப்பட்டால், ஹிந்து மக்கள் கட்சி தமிழகம், பொதுமக்களையும், பக்தர்களையும் திரட்டி, போராட்டத்தில் ஈடுபடும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.