திருப்பரங்குன்றம் கோயிலில் மீண்டும் திருக்கல்யாணம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2021 10:02
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு உபய திருக்கல்யாணம் நேற்று முதல் மீண்டும் துவங்கியது.
வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் உபய திருக்கல்யாணம் நடத்துகினர். சுவாமி, தெய்வானைக்கு அபிேஷகம், பூஜைகள் முடிந்து திருக்கல்யாண அலங்காரம் செய்து, யாக பூஜைகளுக்கு பின் திருக்கல்யாணம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து, நேற்று முதல் திருக்கல்யாணம் மீண்டும் துவங்கியது. இதை நடத்த விரும்பும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கோயில் துணை கமிஷனர் தொரிவித்தார்.