அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், நாளை சிறப்பு வழிபாடுடன் மூலிகை சூரணம் வழங்கப்படுகிறது. அன்னூரில், மகா விஷ்ணுவின் அவதார புருஷராக திகழும் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை மாலை 6:30 மணிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. இதையடுத்து மூலிகைகளால் சூரணம் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சூரணம் பருகினால் உடல் நலம் மேம்படும் என்பது நம்பிக்கை. விழா ஏற்பாடுகளை, ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.