பதிவு செய்த நாள்
10
பிப்
2021
04:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகிலுள்ள குள்ளனூர் மாரியம்மன் கோவில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி அன்று நடந்து வரும் பூஜைகளில், அம்மனை வழிபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, பம்பை மேள தாளங்கள் முழங்க, அம்மன் வீதி உலா வந்தார். பின்னர் கோவிலில், ஆண்டு விழாவையொட்டி, கேக் வெட்டி கொண்டாடினர்.