விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையாத்தங்குடிக்கு வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2021 08:02
கீழச்சிவல்பட்டி:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே இளையாத்தங்குடியில் காஞ்சி மடத்தின் 65வது பீடாதிபதி அதிஷ்டான பூஜைகளில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.
இளையாத்தங்குடியில் காஞ்சி மடத்தின் 65 வது பீடாதிபதியான மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ளது. இதற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று வந்தார். கிராமத்தினர்,முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.நேற்று காலை அதிஷ்டானத்தில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து காலை 10:45 மணிக்கு கோபூஜை, சந்திரமவுலீஸ்வர பூஜையை நடத்தினார். ஆதி சங்கரர் வழிபட்ட காசிலிங்கத்திற்கும், மேருவிற்கு நெய் விளக்கேற்றி, மலர்கள், தீர்த்தம், வில்வ இலைகளால் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை செய்தார்.பக்தர்கள் பிக் ஷா வந்தனம் செலுத்தினர். தொடர்ந்து பாத பூஜை, உச்சிக்கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.மாலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்கரமடத்திற்கு செல்கிறார்.ஏற்பாட்டினை இளையாத்தங்குடி சுதர்சன மகா தேவேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.