பதிவு செய்த நாள்
20
பிப்
2021
10:02
குமாரபாளையம்: கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கப்பட்டது. குமாரபாளையம் அருகே, கோட்டைமேடு பத்ரகாளியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், அன்னபூரணி சமேத கைலாசநாதர், பூதேவி, ஸ்ரீதேவி, உடனமர் தாமோதர பெருமாள் ஆலய திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொங்கலிட்டு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் நடந்தது. வரும், 22ல் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல், 27ல் மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்தல், மார்ச், 3ல் பூவோடு இறக்குதல், அதே நாளில், காவிரி ஆற்றிலிருந்து மலர்களால் அலங்கரிக்கபட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தவாறு வர தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், 4ல் திருக்கல்யாண வைபோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.