கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டி கிராமத்தில் ஒப்பில்லா அம்மன் திருக்கோவில் முப்பூஜை விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புனவாசிப்பட்டி கிராமத்தில் ஒப்பில்லா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முப்பூஜை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து காவிரி நீர் எடுத்து வரப்பட்டது. இன்று காலை பூஜை, நாளை காலை பொங்கல் வைத்தல், காது குத்துதல், நேர்த்திக்கடன், இரவு முப்பூஜை, காவல் கிடா வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.