திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2021 12:02
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வேண்டுதல்களை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவும், மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்றுமுன் இரவு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டு களை ஏந்தி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் எடுத்து வந்த பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். இதேபோன்று பல பகுதிகளிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகளை கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.