பதிவு செய்த நாள்
22
பிப்
2021
04:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதி, காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு பஞ்சகவ்ய பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று (21ம் தேதி), காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, இரவு, 9:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூஜை நடக்கிறது. இன்று (22ம் தேதி) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, யாத்ரதானம், கலசங்கள் புறப்படுதலும், காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன்பின், காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அன்னதானம் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. கும்பாபிஷேக வைபவத்தை,பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் நல்லசாமி சிவாச்சாரியார், திருநள்ளார் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பரம்பரை பூஜாஸ்தானிகர் ராஜசுவாமிநாத சிவாச்சாரியார், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் சிவாநந்த சிவாச்சாரியார் நடத்துகின்றனர்.