திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2021 05:02
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று கோலாகலமாக நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி சாலையில் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி ஸ்ரீ ஸ்ரீவெங்கடாசலபதி கோவில் கட்டப்படவுள்ளது. இதற்காக அ.தி.மு.க..கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ., 4 ஏக்கர் நிலத்தை தனது சொந்த செலவில் வாங்கி திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை இன்று( 22ம் தேதி) காலை 9-10.30 மணிக்குள் நடக்கிறது.
கோவில் கட்டுமான பணிக்களுக்கான பூமி பூஜை விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திருப்பதி தேவஸ்தான போர்டு குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முன்னிலை வகிக்கிறார். மேலும், திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ..க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். விழா கோலாகலமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. செய்து வருகிறார்.