பதிவு செய்த நாள்
25
பிப்
2021
11:02
வண்ணாரப்பேட்டை; வண்ணாரப்பேட்டை, காளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் தெருவில், 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த, காளியம்மன் கோவில் உள்ளது.நேற்று காலை, இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்களின் மீது கும்பாபிஷேக நீர் தெளிக்கப்பட்ட பின், மூலவர் காளியம்மன் அலங்கார ஜோதியாக, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், பா.ஜ., மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, 2,000 பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.நாளை, காளியம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்வு நடக்க உள்ளது. அத்துடன், 48 நாட்களுக்கு தொடர்ந்து, மண்டல பூஜையும் நடக்க உள்ளது.