திருப்பூர் : திருப்பூர், அமர்ஜோதி பொன் நகரிலுள்ள, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. கோவிலில் புதியதாக நிர்மானிக்கப்பட்ட ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பாலமுருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.